சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்; விபத்தில் சிக்கும் அபாயம்

கூவத்துார் அருகே வாயலுார் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், பாலாற்றை கடக்கும் பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் சாலையில் தினமும் செல்லும் லாரிகளில் இருந்து விழும் ஜல்லி கற்கள் மற்றும் மணல், சிதறி சாலை ஓரத்தில் குவிந்து உள்ளன.

இதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், சாலை ஓரத்தில் குவிந்துள்ள ஜல்லி கற்கள் மற்றும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இ.கவியரசன்.

செய்யூர்.

Advertisement