மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்

அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் மற்றும் அண்ணா வளைவு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மேம்பாலத் துண்களில், பல லட்சம் ரூபாய் செலவில் சுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

அவை, போதிய பராமரிப்பின்றி மோசமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, துாண் பூங்காவில் செடிகள் இன்றியும், பிளாஸ்டிக் 'கப்'கள் உடைந்து கிடக்கின்றன. துாண்கள் இடையே வைத்த செயற்கை நீரூற்றும் இயங்காமலேயே உள்ளன. மோசமான பராமரிப்பு காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

- சண்முகம், திருமங்கலம்

Advertisement