இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா; மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு

8


மும்பை: இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் திறந்துள்ளது. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஷோரூமை திறந்து வைத்தார்.


உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவங்கி உள்ளது. மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஷோரூமை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.

தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் கார்கள் விற்பனை கடும் சரிவை கண்ட நிலையில், இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்வதற்காக, முதற்கட்டமாக ஷாங்காய் ஆலையில் இருந்து '5 ஒய்' ரக கார்களை டெஸ்லா இறக்குமதி செய்துள்ளது.



மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது. y வகை மின்சார கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் கார் ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


'Model Y long range' காரின் விலை ரூ.68 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான (VF6, VF7) முன்பதிவு இன்று (ஜூலை 15) தொடங்கியது.

Advertisement