சாவிலும் இணை பிரியாத தம்பதி

கோவை: கணவன் இறந்த சோகத்தில் அதேநாளில் மனைவியும் காலமானது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை பூர்வீகமாக கொண்டவர் ராதாகிருஷ்ணன்(92). பத்திர எழுத்தர் ஆக வேலை பார்த்தவர். வயது முதிர்ந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் காலமானார். இதனால் வேதனையில் இருந்த அவரது மனைவி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்தது உறவினர்கள் ஊர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழந்தமிழர் மணிகள் செய்த தொழிற்கூடம்: பொற்பனைக்கோட்டையில் 2வது கட்ட அகழாய்வு நிறைவு
-
இன்னும் எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்: டிரம்ப் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்
-
போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா
-
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தணும்: சீமான்
-
கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
Advertisement
Advertisement