விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று(ஜூலை 14) காலமானார். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சரோஜா தேவி 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் ஏறக்குறைய 200 படங்கள் நடித்துள்ளார்.



@block_B@
பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் பலர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் தஷாவரா கிராமத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஒக்கலிகர் சம்பிரதாயப்படி சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. block_B
இறுதிச்சடங்கில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டார். மேலும் திரையுலகை சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், ஜெயமாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கண்கள் தானம்
@quote@ சரோஜா தேவி திரைமறைவில் பல பொது சேவைகள் செய்தவர். தன் கண்களை தானம் செய்துள்ளார். நேற்று மருத்துவ குழுவினர் அவரது கண்களை தானமாக பெற்றனர். quote




மேலும்
-
பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு
-
ஓம் நமசிவாய டி.வி.,தொடரை இயக்கிய தீரஜ் குமார் மரணம்
-
ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!
-
அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா: அவர் நினைப்பு நடப்புக்கு வருமா?
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி