மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.62 கோடி மதிப்புள்ள கோகைன் போதை பொருள் சிக்கியது; பிஸ்கட், சாக்லேட்டுகளில் அடைத்து கடத்தி வந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தோஹா நாட்டில் இருந்து மும்பை வரும் பயணிகள் விமானத்தில் பெரிய அளவில் போதை பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏர்போர்ட்டில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.
அப்போது பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழவே, அவரையும், அவர் கொண்டு வந்திருந்த உடமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்த பெண் வைத்திருந்த 9 பெரிய பெட்டிகளை சோதனையிட்டனர்.
அவற்றில் 6 பெட்டிகளில் பிரபல நிறுவனத்தின் பிஸ்கட்டுகளும், 3 பெட்டிகளில் சாக்லேட்டுகளும் இருந்ததைக் கண்டனர். சந்தேகம் மேலும் வலுக்கவே, அவற்றை தனித்தனியாக ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் சட்ட விரோதமாக கோகைன் போதை பொருளை அடைத்து, அந்த பெண் பயணி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 300 மாத்திரைகளின் உள்ளே கோகைனை நிரப்பி, அதை சாக்லேட் மற்றும் க்ரீம் பிஸ்கெட்டுகளின் நடுவில் வைத்து நூதன முறையில் கொண்டு வந்திருப்பதை கண்டனர்.
மொத்தம் அவரின் பையில் 6261 கிராம் கோகைன் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச கள்ளச்சந்தை மார்க்கெட்டில் அதன் மதிப்பு ரூ.62.6 கோடி என்று தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்திய பெண்ணை கைது செய்தனர்.
அவர் யார்? யாருக்காக, எதற்காக இந்த கடத்தலில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










மேலும்
-
பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு
-
ஓம் நமசிவாய டி.வி.,தொடரை இயக்கிய தீரஜ் குமார் மரணம்
-
ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!
-
அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா: அவர் நினைப்பு நடப்புக்கு வருமா?
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி