காத்திருப்போம்... காத்திருப்போம்... காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!

சென்னை: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்'' என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களை ராமதாஸ் சந்தித்தார். அன்புமணியும், ஜி.கே.மணியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ''அது என்ன பே சினார்கள், ஏது பேசினார்கள் என்று கேட்டு விட்டு நாளை சொல்லட்டுமா'' என ராமதாஸ் பதில் அளித்தார்.
கேள்வியும், பதிலும்!
கேள்வி: அம்மா சின்னய்யாவை சென்று பார்த்து வந்துள்ளார்?
ராமதாஸ் பதில்: இந்த கேள்வியே தப்பு... அம்மா பிள்ளையை சந்திக்கலாம். பிள்ளை அம்மாவை சந்திக்கலாம். இது சகஜமான ஒன்று தான்.
கேள்வி: உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
ராமதாஸ் பதில்: காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்.
கேள்வி: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, உங்களுடைய மோதல் போக்கு தொடர்கிறது. எப்பொழுது சரியாகும்?
4 நாட்கள் தொடரும், பின்னர் சரியாகிவிடும், விரைவில் சந்திப்போம் என பதில் அளித்து விட்டு, காரில் ராமதாஸ் புறப்பட்டு சென்றார்.





மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தணும்: சீமான்
-
கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
-
210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்
-
பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு
-
ஓம் நமசிவாய டி.வி.,தொடரை இயக்கிய தீரஜ் குமார் மரணம்
-
ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்