கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

1

பெங்களூரு: பெங்களூருவில் ஒரு கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதற்காக 2 விரிவுரையாளர்களும் அவர்களது நண்பர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூவில் இயற்பியல் விரிவுரையாளர் நரேந்திரா, உயிரியல் விரிவுரையாளர் சந்தீப் மற்றும் அவர்களது நண்பர் அனுாப் ஆகியோர் ஒரு தனியார் கல்லுாரியில் பணிபுரிகின்றனர். இவர்கள் மூன்று பேரும் கல்லுாரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுத்ததால், அதிர்ச்சியான மாணவி, தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள், மாநில மகளிர் அணுகினர். அதை தொடர்ந்து மாரத்தஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

இயற்பியல் விரிவுரையாளர் நரேந்திரா முதலில் கல்வி குறிப்புகளை பகிர்ந்து கொள்வதாக பொய்யாக கூறி மாணவியுடன் பழகி, தொடர்ந்து மெசேஜ் அனுப்புவதன் மூலம் நட்பை வளர்த்துக்கொண்டார். நாளடைவில் அந்த மாணவியை பெங்களூருவில் உள்ள அனுாப்பின் அறைக்கு அழைத்து, அங்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, நடந்ததை யாரிடம் கூறக்கூடாது. அப்படி கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர்.

அதை தொடர்ந்து சில நாட்களுக்கு பின் உயிரியல் விரிவுரையாளர் சந்தீப், அந்த மாணவி அணுகி, நரேந்திராவுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக பொய்யாகக்கூறி மிரட்டி, அனுாப் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து போலீசார் நரேந்திரா, சந்தீப் மற்றும் அனுாப் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement