பா.ஜ., இல்லை என்றால் தி.மு.க., அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும்: சீமான்

சென்னை: ''பா.ஜ., என்று ஒன்று இல்லை என்றால் தி.மு.க., என்ற கட்சி அழிந்து, 20 வருடங்கள் ஆகி இருக்கும்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி உள்ளார். அரசின் இந்த முன்னெடுப்பை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில்: உங்களுடன் முதல்வர் சரி, இவ்வளவு நாளாக அவர் யாருடன் இருந்தார். இந்த கேள்விக்கு யாரிடம் பதில் இருக்கிறது. வீடு தேடி அரசு போகிறது. இவ்வளவு நாட்களாக அரசு யாரை தேடி சென்றது. ஓரணியில் திரள்வோம்.
கூடி கொள்ளையடிக்க, கூடி கொலை செய்ய அதற்கு தானே? வேறு எதற்கு? கூடி குடிக்க, வேறு எதற்காக ஓரணியில் திரள்வோம். ஓரணியில் தேர்தலுக்கு 6 மாதம் இருக்கும் போது திரள்வீர்கள். அதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். மொழி காக்க என்று போட்டு இருக்கிறீர்கள். மண் காக்கிறார்கள். இவ்வளவு நாட்களாக திருடி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். மண், மானம், மொழி காக்க எப்பொழுது வருவீர்கள். நாட்டுக்கு பிரச்னை என்று இப்பொழுதான் கேட்கிறார்கள்.
@quote@தேர்தல் வரும் போது ஒரு காதல் வருகிறது.
தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும். சாலைகள் போடப்படும். எல்லாம் நடக்கும். மின்சாரங்கள் அணையாமல் கொடுக்கப்படும். இது தான் தேர்தல் அரசியல், கட்சி அரசியல்.quote
என்றைக்கு இந்த இரண்டையும் கடந்து மக்கள் அரசியல் இந்த மண்ணில் மலர்கிறதோ அன்று தான், காமராஜரின் ஆட்சி இந்த மண்ணில் மலரும். இல்லையென்றால் மலராது. பா.ஜ., என்று ஒன்று இல்லை என்றால் தி.மு.க., என்ற கட்சி அழிந்து, 20 வருடங்கள் ஆகி இருக்கும்.
@quote@தி.மு.க.,வை பதவியில் அமர்த்தியது ஸ்டாலினா? பிரதமர் மோடியா?தி.மு.க., கட்சி உழைத்து வென்று இருக்கிறதா? பா.ஜ., வெற்றி பெற வைத்து இருக்கிறதா? அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் என்ன நடந்தது. ரெய்டு வந்ததும் பிரதமர் மோடியை ஓடி போய் பார்த்தது யார்? quote
அங்கு போய் கையை பிடித்து கெஞ்சியது யார்? இப்படி ஒரு அரசியல் கட்டமைப்பை திராவிட கட்சிகளை தவிர வேறு யார் செய்வார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
















மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தணும்: சீமான்
-
கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
-
210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்
-
பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு
-
ஓம் நமசிவாய டி.வி.,தொடரை இயக்கிய தீரஜ் குமார் மரணம்
-
ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்