பழந்தமிழர் மணிகள் செய்த தொழிற்கூடம்: பொற்பனைக்கோட்டையில் 2வது கட்ட அகழாய்வு நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில், 2வது கட்டம் அகழாய்வில் பணிகள், மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் முடிவுற்று, அகழாய்வுக்குழிகள் மூடும் பணி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் சார்ந்த இடங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதி உள்ளது. தமிழக திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021 ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட அகழாய்வில்,இதில், 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 533 தொல்பெருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும் கீறல் குறியீடுகளும் செங்கல் கட்டுமானங்களும், எலும்பு முனை கருவி, தங்க மூக்குத்தி, தோடு, சூதுபவள மணிகள், தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு, மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகை பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு எண்னை ஜாடி பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
2வது கட்ட தொல்லியல் அகழாய்வில்,
செப்பினால் செய்யப்பட்ட மைத்தீட்டும் குச்சி ஒன்றும், செம்பினால் ஆன ஆணிகள். முக்கோண வடிவிலான தேய்ப்புக்கல், அகேட் கல்லின் மூலப்பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு முழுமை பெற்றும் பெறாமலும் கிடைத்துள்ள மணிகளானது, பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது.
இதுவரை இந்த அகழாய்வு குழியில் கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட மணி மற்றும் சூது பவள மணி, சிவப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு சிவப்பு நிற பானை ஒடுகள் மற்றும் வட இந்தியாவை சார்ந்த டெக்கான் பானை ஒடுகள் கிடைத்தது.
இந்த அகழாய்வு பணிகள் 203 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. பொற்பனைக்கோட்டை 2023-2024 இரண்டாம் கட்டம் அகழாய்வில் அகழ்ந்தெடுக்கும் பணி கடந்த மே 12ம் தேதி முடிவுற்று, மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது.
மேலும், அகழாய்வுக் குழிகள் மூடும் பணியானது இன்று துவங்கியுள்ளது. பின்னர், ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று தொல்லியல் அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்
-
17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை
-
பள்ளியில் ஆசிரியருக்கு எதிர்ப்பு மாணவர்களை அனுப்ப மறுப்பு
-
விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான் சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு
-
காலை உணவு திட்டம் திடீர் ரத்து சிறுவர், சிறுமியர் பசியால் தவிப்பு
-
குறுவை துவங்கியாச்சு மேய்ச்சலுக்கு தடை வந்தாச்சு
-
கஞ்சா விற்ற மூதாட்டி: குண்டர் சட்டத்தில் கைது