17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

2

திருநெல்வேலி:17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2023ல் அதே பகுதி ஜாகுபர் ஹுசைன் 55, என்பவர் பலாத்காரம் செய்தார். சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

ஜாகுபர் ஹுசைன் கைது செய்யப்பட்டார். இதில் ஜாகுபர் ஹுசைனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் திருநெல்வேலி போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

வழக்கை நடத்திய டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அரசு வக்கீல் உஷா ஆகியோரை எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Advertisement