கஞ்சா விற்ற மூதாட்டி: குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி,:திருச்சியில், ராம்ஜிநகர் உட்பட பல்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 19ம் தேதி, புங்கனுார் மில் காலனி பகுதியில் சோதனை நடத்திய ராம்ஜிநகர் போலீசார், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த தனலட்சுமி, 67, என்ற மூதாட்டியை கைது செய்தனர்.

ஏற்கனவே, பல முறை கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார்.

அதன்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியை, நேற்று, மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement