கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு

7


சென்னை:
கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பையும் அகற்ற உத்தரவிட்டுள்ளது.


கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என கனகசுந்தரம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.


இதனை விசாரித்த நீதிமன்றம், கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 மாதங்களில் சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement