நான்கு மாதங்களாக சி.பி.எஸ்., பிடித்தம் இல்லை வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் புலம்பல்
விருதுநகர்:தமிழகத்தில் கருவூலத்துறையில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) எண் வழங்காததால் 4 மாதங்களாக சி.பி.எஸ்., பிடித்தம் செய்யவில்லை என வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் புலம்புகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 3263 வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, வகுப்பறை, கழிப்பறை வசதியை ஏற்படுத்துவது, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது, ஆசிரியர்கள் பணிபுரிவதை கண்காணிப்பது, எண்ணும் எழுத்தும், திறன் போன்ற திட்டங்களை கண்காணிப்பது போன்றவை ஆகும்.
அரசு ஊழியர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் கருவூலத்துறை சம்பளம் வழங்குகிறது. இதற்காக அவர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்எம்.எஸ்., எண் வழங்கப்படும். இந்த எண் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் இவர்களுக்கு சிறப்பு திட்டம் மூலம் சம்பளம் தந்து கொண்டிருந்தனர். ஆனால் கருவூலத்துறையில் சி.பி.எஸ்., எனும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான பணத்தை செலுத்தி வந்தனர். ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., கட்டாயமாக்கப்பட்ட பின் அதன் எண் இருந்தால் தான் சி.பி.எஸ்., தொகை ஏற்றுக் கொள்ளப்படும் என கருவூத்துறையினர் கூறிவிட்டனர்.
இதனால் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு 2025 மார்ச்சில் இருந்து நான்கு மாதங்களாக சி.பி.எஸ்., தொகை செலுத்தவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: சி.பி.எஸ்.,ல் தொகை செலுத்தும் நாளிலிருந்து தான் வட்டி கணக்கீடு செய்வர். இவர்கள் இப்போது தான் எண் வாங்கவே முயற்சிக்கின்றனர். அதற்கு பிறகு தான் மொத்தமாக கொடுப்பர். இதனால் எங்களுக்கு நஷ்டம் தான். தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எண்ணை முன்பே வழங்கியிருக்கலாம். இனியும் தாமதிக்காது விரைந்து வழங்க முன் வர வேண்டும் என்றார்.
மேலும்
-
போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை
-
புனே சொகுசு கார் விபத்து வழக்கு சிறுவனை மேஜராக கருத மறுப்பு
-
5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
-
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் சம்பவம்
-
மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு; வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை
-
ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்