ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்

9


சென்னை: ''தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க., பங்கேற்க வேண்டும்'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


பா.ம.க.,வின் 37வது ஆண்டு விழாவை ஒட்டி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம். ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம். பா.ம.க., இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பா.ம.க.விற்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை.

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பா.ம.க., தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பா.ம.க., வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க., பங்கேற்க வேண்டும்.



அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் ராமதாஸால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement