மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது

சண்டிகர்: மாரத்தான் வீரர் பவுஜா சிங்கை கார் ஏற்றி கொன்ற வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங். பியாஸ் கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். பவுஜா சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் வெளியிட்டு இருந்தனர். இந் நிலையில், பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார்.
சம்பவ பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர். கபூர்தலாவைச் சேர்ந்த வரிந்தர் சிங் என்பவரின் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரின் கிராமத்துக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கர்தார்பூரைச் சேர்ந்த அமிர்தபால் சிங் தில்லான் என்பவரிடம் காரை விற்றுவிட்ட தகவலை தெரிவித்துள்ளார். கார் வாங்கி இருந்தாலும் அதன் ஆவணங்களை தம் பெயருக்கு மாற்றாமல்,வரிந்தர் சிங் பெயரிலேயே அமிர்தபால் சிங் தில்லான் பயன்படுத்தி இருக்கிறார்.
விபத்து நிகழ்ந்த நேரத்தில் அவர் தான் சொகுசு காரை ஓட்டிச் சென்று பவுஜா சிங் மீது மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.



மேலும்
-
தேசியம் பேட்டி
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்
-
ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
-
இஸ்ரேலின் குற்றங்களுக்கு துணை போகும் அமெரிக்கா; ஈரான் தலைவர் கமேனி கடும் சாடல்
-
'நடத்துவது நல்ல ஆட்சி' என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்; இ.பி.எஸ்.,