கோவை, நீலகிரியில் 6 நாட்களுக்கு கன மழை

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில், அடுத்த ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதன் அறிக்கை:



மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று முதல் ஆறு நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம்.


தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், இன்றும் , நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் 1 முதல் நேற்று வரை சராசரியாக 1096.6 மி.மீ., மழை பதிவாகும். இதே கால அளவில் இந்தாண்டு 723 மி.மீ., மழை பெய்தது. இது, 34 சதவீதம் குறைவாகும்.


@twitter@https://x.com/dinamalarweb/status/1945286388531732580twitter

மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் 1 முதல் நேற்று வரை சராசரியாக 1096.6 மி.மீ., மழை பதிவாகும். இதே கால அளவில் இந்தாண்டு 723 மி.மீ., மழை பெய்தது. இது, 34 சதவீதம் குறைவாகும்.

8 இடங்களில் சதம்



தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, எட்டு இடங்களில், 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. மதுரை விமான நிலைய பகுதியில், அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, சென்னை, கடலுார், நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர், துாத்துக்குடி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெயில் வாட்டியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement