திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும்; சொல்கிறார் சீமான்

3

சென்னை: '' திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும், சேவை அரசியலோ, செயல் அரசியலோ செய்யாது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழகம்' என்பது எதற்காக? ஹிந்தி திணிப்பிற்கு எதிர்த்தா? என்று ஒன்றும் கிடையாது. திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும், சேவை அரசியலோ, செயல் அரசியலோ செய்யாது. அவர்களுக்கு தெரியாது. வீடு தேடி அரசு வருகிறது, ரோட்டில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக தி.மு.க., கூறுகிறது.

காசு கொடுக்காமல்....!




ஏற்கனவே ஒன்றரை கோடி உறுப்பினர்கள் வைத்து இருக்கிறீர்கள். ஓட்டுக்கு காசு கொடுப்பீர்களா, இல்லையா? அந்த ஒரு கோடி பேர் வாக்கு செலுத்தினாலே தி.மு.க., வென்று விடுமே, பிறகு ஏன் காசு கொடுக்கிறார்கள். உங்க கிட்ட இருந்து தான் இந்த மண்ணையையும், மானத்தையும் முதலில் காப்பாற்ற வேண்டும்.


நானும் பேசுகிறேன். முதல்வர் ஸ்டாலினும் பேசட்டும், உதயநிதி பேசட்டும், கூட்டத்திற்கு சாராயம், சாப்பாடு கொடுக்காமல், யார் பேசுறதுக்கு மக்கள் வருகிறார்கள் என்று பந்தயம் வைக்கலாம். ரோடு ஷோ போடுகிறீர்கள், எல்லாரும் அப்படியே போய் கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் கேள்வி



ஒரு அம்மா உட்காந்து இருக்கிறது. எவ்வளவு என்று கேட்பதற்கு, ரூ.200 என்று சொல்கிறது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வை 13 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள். அதில் விடியல் பயணம் எப்பொழுது தொடங்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. இதனை எல்லாம் நீங்கள் சகித்து கொண்டு தானே இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய பொது அறிவு கேள்வி?




அதிகாரம்



தேர்வாணைய தலைவர் அரசியல் கேள்விகளை தவிர்க்க சொல்லி இருக்கிறோம் என்கிறார். விடியல் பயணம் எப்பொழுது என்பது அரசியல் கேள்வி இல்லை. ஒரு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து கொண்டு இருக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement