பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, 901 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். லார்ட்ஸ் டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் (5+2) சாய்த்தார். இப்போட்டியில் 'சுழலில்' அசத்திய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் (4 விக்.,), 58வது இடத்தில் இருந்து 46வது இடத்தை (தலா 425 புள்ளி) தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர், டேன் பேட்டர்சனுடன் பகிர்ந்து கொண்டார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் 4 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலந்து (784), 12வது இடத்தில் இருந்து முதன்முறையாக 6வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியின் 2வது இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (766), 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (409 புள்ளி) முதலிடத்தில் தொடர்கிறார். இவர், லார்ட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் அரைசதம் கடந்தார்.
ரூட் 'நம்பர்-1': பேட்டர் தரவரிசையில், லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் (888), மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் (862) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (867) 2வது இடத்துக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஜெய்ஸ்வால் (801), ரிஷாப் பன்ட் (779), சுப்மன் கில் (765) முறையே 5, 8, 9வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
மேலும்
-
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
-
மனிதர்களுடன் உணவை பகிரும் உயிரினம்
-
கொசுவை கொல்லும் லேசர்!