கொசுவை கொல்லும் லேசர்!

சீனாவில் உருவாக்கப்பட்ட 'ஃபோட்டான் மேட்ரிக்ஸ்' என்ற கருவி, கொசுவைக் குறிவைத்துக் கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் லேசர், மிகத் துல்லியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
இந்தக் கருவி, லிடார் (LiDAR) உணரிகள் மூலம், பறக்கும் கொசுவின் அளவு, துாரம், மற்றும் திசை ஆகியவற்றை மூன்று மில்லி விநாடிகளுக்குள் கண்டறியும். பிறகு, ஒரு சிறப்பு லேசர் கற்றையை செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழித்துவிடும்.
மனிதர்களுக்கு ஆபத்தில்லாதது என்ற தரச் சான்று பெற்ற இந்தக் கருவி, நீர்ப்புகாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை வீட்டிற்குள் மட்டுமல்ல. வெளியேயும் நிறுவ முடியும். இதன் அடிப்படை மாடல், 3 மீட்டர் துாரம் வரையிலும், ப்ரோ மாடல் 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களை தாக்கும். இதன் விலை ₹40,102 முதல் ₹53,898 ரூபாய் வரை இருக்கும்.
மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுக்க ஒரு ரேடார் பாதுகாப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த லேசரின் சக்தி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கருவி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால், இது கொசுக்களுக்கு எதிராக ஒரு புதிய ஆயுதம் நமக்குக் கிடைக்கும்.
மேலும்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு