சிந்து அதிர்ச்சி தோல்வி: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில் ஏமாற்றம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.
டோக்கியோவில், ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் சிம் யு ஜின் மோதினர். இதில் ஏமாற்றிய சிந்து 15-21, 14-21 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 8-21, 12-21 என தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கிடம் வீழ்ந்தார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா 21-15, 18-21, 21-18 என சகவீராங்கனை ரக் ஷிதா ஸ்ரீயை வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வாங் ஜெங் ஜிங் மோதினர். இதில் லக்சயா 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-10 என தென் கொரியாவின் காங் மின் ஹயுக், கி டோங் ஜு ஜோடியை வீழ்த்தியது.
மேலும்
-
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
-
மனிதர்களுடன் உணவை பகிரும் உயிரினம்
-
கொசுவை கொல்லும் லேசர்!