பள்ளி மாணவர்கள் இடையே கால்பந்து போட்டி

திண்டுக்கல்: பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி, குயின் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையேயான 31வது ஆண்டு கோபாலகிருஷ்ணன் நாயுடு நினைவு கோப்பை, 21 வது ஆண்டு காவேரியம்மாள் நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் தலைமையில் பள்ளி தாளாளர் மரியநாதன் தொடங்கி வைத்தார். மாணவர்கள் பிரிவில் 12 அணி, மாணவிகள் பிரிவில் 7 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி,பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது. வெற்றிபெறும் அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கப்படும். தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ரோட்டரி துணை ஆளுநர்கள் சண்முகம், ஷர்மிளா பாலகுரு, தலைவர்கள் செந்தில்குமார், ராஜாத்தி கமலக்கண்ணன், செயலாளர் ரெங்கையா கலந்து கொண்டனர்.

Advertisement