சாலை வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:புத்தகரம் சாலையோர வளைவுகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க தடுப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புத்தகரம் கிராமத்தில் இருந்து, நெய்க்குப்பம் வழியாக கிதிரிப்பேட்டை, பூசிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஒன்றிய கட்டுப்பாட்டிலான சாலை உள்ளது.
குறுகியதான இச்சாலையில் புத்தகரம் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதிகளில் சாலையையொட்டிய விவசாய நிலப் பகுதிகள் தாழ்வானதாக உள்ளது.
இச்சாலை வளைவுகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, புத்தகரம் சாலை வளைவு பகுதிகளில், சாலையையொட்டி இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
-
மதுரையில் மாநில மாநாடு கிருஷ்ணசாமி தகவல்
-
இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி
-
மீன் உருவம் பொறித்த பாண்டியர் காலத்து 5 வகை 'எல்லாம் தலையானான்' நாணயம் தங்கம், செம்பிலானவை சேகரிப்பு
-
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஸ்டாலின் காட்டம்
-
குண்டுவெடிப்பு கைதிக்கு 5 நாள் 'போலீஸ் கஸ்டடி'
Advertisement
Advertisement