சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை: கர்நாடக மாநிலம் ஹூப்ளி -ராமநாதபுரம்இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சனி தோறும் இயக்கப்படும் ஹூப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07355), ஆக.,30 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ராமநாதபுரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் (07356), ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், சேலம், ஓசூர், வழியாக இயக்கப்படுகிறது.

Advertisement