போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூவாடு கிராமத்தை சேர்ந்த கலியன் மகன் மணிகண்டன், 36; இவர் கடந்த ஜூன் 23 ம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் பொது அமைதிக்கு பாதகமான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவரது நடவடிக்கையை கட்டுபடுத்த தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனை தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனிடம் அதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்