நாகபக்தியில் வாழும் 'தால் வாலே' குடும்பம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஒரு வீதியில் அமைதியாக வாழ்கிறது அகர்வால் குடும்பம், "தால் வாலே" என்று அழைக்கப்படுகின்றனர்.
நாகபக்தி மிகுந்த இந்த குடும்பம், நாக பஞ்சமி நாளில் செய்யும் ஒரு விசேஷ செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை வரும் நாகபஞ்சமி நாளான்று இந்த குடும்பத்தினர் நாகப்பாம்பு முதல் சாரைப்பாம்பு வரை ஏாரளமான பாம்புகளை மண்பானையில் வைத்து எடுத்துச் சென்று சுல்தாஜி என்று அழைக்கப்படும் இயற்கையான அழகான அமைதியான காட்டிற்குள் விட்டனர்,காட்டிற்குள் பாம்பு செல்வதை பார்த்து பயபக்தியுடன் வணங்கினர்,இந்த நிகழ்வில் பெண்களும்,குழந்தைகளும் கூட ஆர்வமுடன் கலந்து கொண்டு கொஞ்சமும் பயமின்றி பாம்புகளை கையில் எடுத்து காட்டின் வழியே விட்டனர்.
பாம்பைக் கண்டு பயமில்லையா என்று கேட்ட போது பயமா அவர் எங்களைக் காக்கும் கடவுள் பரமேஸ்வரானாக்கும் என்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்த குடும்பத்தின் மூதாதையர் ஒருவர் தன் வீட்டிற்கு மழை நாளில் அடைக்கலம் தேடி வந்த பாம்பை எடுத்துச் சென்று அதன் வாழ்விடமான காட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டார் அன்றுமுதல் அவருக்கு பல நல்லது நடக்கவே வருடம் தவறாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் நாகபஞ்சமி நாளான்று காட்டுக்குள் பாம்புகளை கொண்டு போய்விடும் மரபை அன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர்.
இந்த நாள் நெருங்கும் போது விவசாயிகள் உள்ளீட்டோர் தாங்கள் பிடித்த பாம்புகளை கொண்டு போய் அகர்வால் குடும்பத்தினரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர்,அப்படி முதல் நாள் சேகரித்த பாம்புகளை பானையில் வைத்து அதற்கான உணவுகள் கொடுத்து பாதுகாத்து பின் மறுநாள் விழா போல அந்த பானைகளை சுமந்து சென்று காட்டுக்குள் விடுகின்றனர்.
ஒரு புனித செயல் போல இவர்கள் இதைச் செய்வதைக் காண்பதற்கு இப்போது எல்லாம் பலரும் கூடுகின்றனர்,மேலும் நாகபஞ்சமி நாள் என்று இல்லை மற்ற நாட்களில் கூட யாராவது எங்காவது பாம்பை பார்த்தால் உடனே இந்த குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கின்றனர் அவர்களில் ஒருவர் உடனே அந்த இடத்திற்கு வந்து பாம்பாட்டியைவிட படு லாவகமாக பாம்பைப்பிடித்து சென்று உடனே காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர்.
இதுநாள் வரை எந்த பாம்பும் இவர்களில் யாரையுமே தீண்டியதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.பாம்பு என்பது கடவுளின் அம்சம் நாகதேவர்களின் வடிவம் என்று சொல்லி நெகிழ்கிறார்கள்.
-எல்.முருகராஜ்
மேலும்
-
தலித் மக்களுக்கு திருமா துரோகம்
-
தமிழக உளவுத்துறை நீண்ட உறக்கத்தில் உள்ளதா? ஹிந்து முன்னணி சந்தேகம்
-
சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொடூரன் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்..
-
குழந்தையின் நலனுக்காக தீர்ப்பை மாற்றலாம்: விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஈராக் வணிக வளாகத்தில் தீ 61 பேர் பலி; 11 பேர் மாயம்
-
ரூ.66,000 கோடி இழப்பீடு வழக்கு: 'பேஸ்புக்'கிற்கு எதிரான விசாரணை துவக்கம்