ஈராக் வணிக வளாகத்தில் தீ 61 பேர் பலி; 11 பேர் மாயம்

பாக்தாத்:ஈராக்கில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 61 பேர் பலியாகினர்; மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள அல் - கூட் நகரில், கடந்த வாரம் புதிதாக வணிக வளாகம் ஒன்று திறக்கப்பட்டது.
பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து மாடி வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஐந்தாவது மாடியில் பற்றிய தீ, மளமளவென பிற தளங்களுக்கும் பரவியது.
இதனால், வணிக வளாகத்துக்கு வந்திருந்தோர் அலறியடித்தபடி வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், வணிக வளாகத்தில் இருந்த 61 பேர் பலியாகினர்.
இதில், 14 பேரின் உடல் அடையாளம் காணமுடியாத அளவிற்கு கருகியது.
மீதமுள்ளோர், கடும் புகையால் மூச்சுத் திணறி பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடும் புகைமூட்டத்தில் சிக்கித் தவித்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்தில் சிக்கி மாயமான 11 பேரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அல் - கூட் நகரம் அமைந்துள்ள வாசிட் மாகாண கவர்னர் முஹமது அல் - மய்யே
தொடர்ச்சி 7ம் பக்கம்
ஈராக்
3ம் பக்கத் தொடர்ச்சி
வெளியிட்டுள்ள அறிக்கை:
தீ விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், கட்டட உரிமையாளர் மற்றும் வணிக வளாக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமானவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம். முதற்கட்ட விசாரணையின் முடிவுகள், 48 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா