தமிழக உளவுத்துறை நீண்ட உறக்கத்தில் உள்ளதா?: ஹிந்து முன்னணி சந்தேகம்

திருப்பூர்: 'தமிழகத்தில் பயங்கரவாத செயலை கண்காணிக்காமல் உளவுத்துறை உறங்குகிறதா?' என்று ஹிந்து முன்னணி சந்தேகம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடந்த 1998ல், அல் - உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து, 58 பேர் இறந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம், தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பயங்கர வாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இரு நாட்களுக்கு முன், ஆந்திராவில் கைதான தலைமறைவு குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அதில், அல் - உம்மா இயக்க தலைவர் பாட்ஷா, தங்கள் ஊரான நாகப்பட்டினத்துக்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்று கொடுத்தார் என கூறி உள்ளனர்.
கூடவே, 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோதும், இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க, இரு முறை வந்ததாக அபூபக்கர் சித்திக் கூறியுள்ளார்.
தேடப்படும் பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து, வெடி மருந்துகள் வாங்கியபோது, தமிழக காவல்துறை உறக்கத்தில் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள், அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதை கூட அறியாதவர்களாக தமிழக உளவுத்துறை இருந்திருக்கிறது. மத்திய அரசின் மூலமாக தகவல் பெற்று, பயங்கரவாத தடுப்பு போலீசார், இவர்களை பிடித்துள்ளனர்.
ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு படை உருவாக்கப்படும் முன், தமிழக உளவுத் துறையும், போலீசாரும், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்கு காரண மாக அமைந்துள்ளது.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்