அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோவில், பல்லவர்மேடு மகா தீப்பாஞ்சியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் அருகில் உள்ள அய்யப்பா நகரில் தாய் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 48வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு மஹா அபிஷேகமும், காலை 7:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், காலை 8:00 மணிக்கு கூழ் படையலிட்டு தீபாராதனையும் நடந்தது.
காலை 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்தார். மாலை 6:00 மணிக்கு காஞ்சி புதிய புயல் மாஸ்டர் கிருஷ்ணா பிரதர்ஸின் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.
இரவு 7:00 மணிக்கு ஒய்யாளி ஆட்டம், 7:30 மணிக்கு கும்பம் படையலிட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது.
மகா தீப்பாஞ்சியம்மன்
காஞ்சிபுரம் பல்லவர்மேடு வ.உ.சி., தெருவில் உள்ள மகா தீப்பாஞ்சியம்மன் கோவிலில் ஆடி முதல் நாளான நேற்று காலை மூலவர் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது.
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு