மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்

4


புதுடில்லி: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.


உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக இரு மாநிலங்களில் 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். உத்தரபிரதேசத்தில் 12 இடங்களிலும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா, மஹிம் ஆகிய இரு இடங்களிலும் சோதனை நடந்தது.



இந்நிலையில், சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, மகாராஷ்டிரா, உ.பி.,யில் இருந்த ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


பாபா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement