களத்துார் பாலத்தில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

அச்சிறுபாக்கம்,:களத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலையிலுள்ள பாலத்தின் மீது, சிமென்ட் தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடில் இருந்து ஒரத்தி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, களத்துார் கிராமம் வழியாக கொங்கரை மாம்பட்டு, முருங்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது.
இந்த சாலையில் களத்துார் பகுதியில், களத்துார் ஏரியில் இருந்து கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கால்வாய் உள்ளது.
இக்கால்வாய் மீது கடந்தாண்டு, புதிதாக சதுர வடிவ பாலம் கட்டப்பட்டது.
ஆனால், பாலத்தில் சிமென்ட் தடுப்பு கட்டைகள் அமைக்காததால், பைக்குகளில் செல்வோர் மற்றும் மிதிவண்டிகளில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர் மிகுந்த அச்சத்துடன் இந்த பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.
பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், பாலத்தின் மீது மூன்றடி உயரம் கொண்ட சிமென்ட் தடுப்பு கட்டைகள் மற்றும் பாலத்தின் பக்கவாட்டில் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்