இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்

பொதுமக்கள் கட்டி வசிக்கும் வீடுகளுக்கு இருக்கும் ஆயுள் காலத்தை ஒப்பிடுகையில் சமீப ஆண்டுகளில் கட்டப்படும் அரசு கட்டடங்களின் ஆயுள் காலம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அந்த கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டும்போது அரசு நிதி அதிகளவில் செலவிடும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மற்ற பகுதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசின் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்தும் இன்றும் பல கிராமங்களுக்கு அடிப்படை தேவைகள் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.
அரசு பள்ளிகள், அங்கன்வாடி, மருத்துவமனை என பல அரசு துறை சார்ந்த கட்டடங்களில் முதலில் பாதிப்படைவது கூரை. இது சிதைந்து பயன்படுத்துவோர் மீது விழ முழு கட்டடமும் பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடுகிறது.
ஒருசில முறை மராமத்து என பணிகள் செய்தாலும் அதுவும் பெரிய அளவில் பலனின்றி அடுத்த சில ஆண்டுகளில் அந்த கட்டடம் அகற்றப்படும் நிலைக்கு மாறிவிடுகிறது.
அரசு கட்டடத்தில் சுவர், தளம் போன்றவை ஸ்திரமாக அமைந்திருந்தாலும் கூரை சிதைந்து பாதிப்படைவதே முதன்மையாக உள்ளது. கட்டடங்களை கட்டி தருவது ஒரு துறை என்றாலும் அதை பயன்படுத்துவோர் முறையாக பராமரிக்க வேண்டும்.
ஆனால் இன்றளவிலும் பயன்பாட்டில் இருக்கும் பல அரசு கட்டடங்களின் மீது பறவைகளின் எச்சம் மூலம் விதை பரவல் ஏற்பட்டு மரங்கள் வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.
அரசு சொத்து என்றாலும் தமது பொறுப்பில் இருக்கும் கட்டடம் என்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பல துறைகளில் ஊழியர்களிடம் இல்லாமல் இருப்பதே காரணம். கூரை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த அரசு நிர்வாகம் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அரசு கட்டடங்களின் ஆயுள் காலத்தை அதிகரித்து மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதை தடுக்க முடியும்.
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு