உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் குவிந்த மக்கள்

பென்னாகரம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனுார் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சேஅள்ளி பஞ்சாயத்தில் உள்ளவர்களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் திருத்தம் உள்ளிட்ட, 15 அரசு துறைகளை சார்ந்த, 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், மாவட்ட முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட உதவி ஆணையர் நர்மதா, பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்திரம் மற்றும் அரசு அலுவலர்கள், திராளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், 1157 மனுக்கள் பெறப்பட்டன.

* கடத்துார் பேரூராட்சியில் நேற்று, 1 முதல், 8 வார்டுகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர், திருமண நிதி உதவி திட்டத்தில், 23 பயனாளிகளுக்கு, 8.37 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கினார். முகாமில், 940 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் தி.மு.க., --எம்.பி., மணி, தாசில்தார் செந்தில், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி கிராமத்தில் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் முகாம் நடந்தது. இதில், 300-க்கும் மேற்பட்டோர் மனு
அளித்தனர்.

Advertisement