சென்னிமலை கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல காளைக்கு பயிற்சி
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, மலை அடிவார கிணற்றில் இருந்து, தினமும் காலை, 8:௦௦ மணி பூஜைக்கு, காளை மூலம், 1,320 படிக்கட்டு வழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.
காலை, 7:20 மணிக்கு கிணற்றில் இருந்து நீர் எடுத்து காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்து விடுவர். அதன் பிறகு மலை கோவிலுக்கு படிக்கட்டு வழியாக, கோவில் பணியாளர்கள் காளை மாட்டை ஓட்டி செல்வது, நுாற்றாண்டு பழக்கமாக உள்ளது. இதற்காக கோசாலையில் மூன்று பொதிகாளை பராமரிக்கப்படுகிறது. தற்போது ஒரு காளைக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது.
இதனால் கோசாலையில் வளர்கப்படும் இளம் காளைக்கு, ஆண்மை நீக்கம் செய்து, மூன்று மாதங்களாக சத்தான உணவு கொடுத்து பராமரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த, 10 நாட்களாக வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன், இந்த காளையை பயிற்சிக்காக ஓட்டி செல்கின்றனர். நன்கு பயிற்சி பெற்ற பிறகு, தீர்த்தக்குடங்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் என்று, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்