பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காற்றாலை இயந்திரம்

தாராபுரம் தாராபுரத்தை அடுத்த முண்டு வேலம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை இயங்கி வந்தது. இயந்திரத்தில் நேற்று மதியம், 12:00 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் கிளம்பிய புகையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குண்டடம் போலீசார் அளித்த தகவலின்படி, தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்தனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
* காங்கேயம் ஊதியூரை அடுத்த நிழலி கவுண்டம்பாளையம் அருகே, தனியார் காற்றாலை இயந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. தீயில் எரிந்த காற்றாலை பாகங்கள் மின் கம்பிகளின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடை
பட்டது. தீப்பிடித்து எரிந்த காற்றாலையின் மதிப்பு, 4 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement