தொழிலாளியை தாக்கிய இருவருக்கு சிறை


ஈரோடு, ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், நஞ்சப்பா நகரை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி சரவணன், 45; பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள ஒரு சில்லி சிக்கன் கடைக்கு சென்று நேற்று முன்தினம் மாலை சில்லி கேட்டுள்ளார். இரவு தான் கிடைக்கும் என்று கடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணன் தகாத வார்த்தை பேசியதால், அஜ்மீர், 26, சபிக், 25, ஆகியோர் தாக்கினராம்.


சரவணன் புகாரின்படி வழக்குப்பதிந்த கருங்கல்பாளையம் போலீசார், இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement