நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
நாமக்கல், நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வரும், 29ல் பாச்சல் தனியார் கல்லுாரியில் நடக்கிறது என, கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மேளா மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது. வரும், 29 காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பாச்சலில் உள்ள ஞானமணி இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்த மேளா நடக்கிறது. வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் மூலம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படும்.
விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் மற்றும் அவைகளின் பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். முன்னணி டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிக்கும் மஹேந்திரா, ஜான்டீர், நியூ ஹாலண்ட், சுராஜ், வி.எஸ்.டி., கிர்லாஸ்கர் போன்ற கம்பெனிகள் அரங்குகளை அமைத்து கருவிகளின் பராமரிப்பு குறித்து விளக்கமளிக்க உள்ளனர்.
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்