குழாய் உடைந்து குடிநீர் வீண்

நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 39 வார்டுகள் உள்ளன. அந்த வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, மோகனுார், ஜேடர்பாளையம் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு அதிலிருந்து நீர் கொண்டுவந்து நகர்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருப்பு வைத்து, அங்கிருந்து தினமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல்-மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து திருச்சி சாலை செல்லும் பகுதியில் டாக்டர் சங்கரன் தெரு அமைந்துள்ளது.
அங்கு தபால் அலுவலகம், ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட தனியார் வங்கிகள் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. அதில், ஸ்டேட் பேங்க் முன் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியாகி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

Advertisement