ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை ஜூலை 31 வரை சிறை காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 28 மற்றும் ஜூலை 1ல் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகுகளையும், அதில் இருந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
காவல் தேதி முடிந்ததையடுத்து நேற்று மீனவர்கள் 15 பேரையும் போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 31 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் சிறையில் அடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement