'லிப்ட்' டில் சிக்கி காவலாளி பலி
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் பிஜு,42. இவர் கொச்சியில் பிராவிடன்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.
நிறுவனம் கட்டடத்தின் முதல் மாடியில் செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று நிறுவனத்திற்கு வந்த பொருட்களை தரை தளத்திலிருந்து சர்வீஸ் லிப்டில் அனுப்பி வைத்தனர்.
இதனை முதலாவது மாடியிலிருந்து பிஜு இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பார்சல் அவரது கையில் இருந்து தவறி லிப்டுக்குள் விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது திடீரென லிப்டின் கதவு மூடியது.
இதில் பிஜுவின் தலை கதவுகளுக்கிடையே சிக்கியது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர். பலத்த காயமடைந்த அவரை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். கொச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
Advertisement
Advertisement