பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
கொல்லம்: கேரளாவில், பள்ளியில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து எட்டாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த தேவலக்கரா பகுதியில் தனியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தினக்கூலி தொழிலாளி வளையபாதம் மனு என்பவரின் மூத்த மகன் மிதுன், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மிதுனின் தாயார் சுஜா, மேற்காசிய நாடான குவைத்தில் நர்சாக பணியாற்றுகிறார்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளி சென்ற மாணவன் மிதுன் அங்கு சக மாணவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடியபோது, அவனது செருப்பு அங்கிருந்த தகர ஷெட் கூரை மீது விழுந்து உள்ளது.
இதை எடுக்க அதன் மீது ஏறியபோது மேலே சென்ற மின் ஒயர் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
கேரள மின்சார வாரியம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகமே மாணவன் இறப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இது தொடர்பாக, பொதுக்கல்வித் துறை மற்றும் கொல்லம் புறநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தி, 14 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கீதா உத்தரவிட்டார்.
மேலும்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்