பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..
தர்மபுரி: ''தி.மு.க.,விடம் ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக நான் காத்து கிடக்கவில்லை,'' என, தர்மபுரியில் நடந்த ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
நான் மாநில கல்லுாரியில் படித்தபோது, மாணவர்கள் கூட்டத்தில் பேசியதை பார்த்து, முன்னாள் முதல்வர் காமராஜர் என்னை காங்கிரசில் சேர அழைத்தார். ஆனால், நான் தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறி மறுத்து விட்டேன்.
மிசா சட்டத்தில் கைதாகி, கடைசியாக விடுதலையானது நான் தான். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின், ம.தி.மு.க.,வை துவங்கினேன். அப்போதும் நான், தி.மு.க.,வை எதிர்க்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதாக அறிவித்தேன். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற முடிவு தவறாக முடிந்து விட்டது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் வைத்திருந்த இரண்டு சயனைடு குப்பிகளில் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.
ஹிந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வை ஆதரித்து வருகிறேன். ஆறு சீட்டுக்காக காத்து கிடக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை