முதல்வர், அமைச்சர் பெயர்களில் சட்ட விரோத பேனர்கள் அரும்பார்த்தபுரம் பைபாசில் அட்டூழியம்

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்களை அகற்றாமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உச்சக்கட்டத்தில் உள்ளது. பிறந்த நாள், காது குத்து, கல்யாணம், கடை திறப்பு என, எதற்கெடுத்தாலும் சட்ட விரோத பேனர்களை சாலையில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது.
புதிதாக வந்துள்ள அரும்பார்த்தபுரம் பைபாசையும் இந்த கும்பல் விட்டு வைக்கவில்லை. சாலையின் இருபுறமும் பேனர்களை சட்ட விரோதமாக வைக்கின்றனர். இவற்றை நிகழ்ச்சி முடிந்த பிறகுகூட அகற்றுவது கிடையாது.
அரும்பார்த்தபுரம் பைபாசில் கடந்த 16ம் தேதி தாபா ஒன்று திறக்கப்பட்டது. விழாவிற்கு வந்த முதல்வர், அமைச்சர், பா.ஜ., என்.ஆர்.காங்., பா.ம.க., பிரமுகர்களை வரவேற்று சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டன.
பேனர்கள் வைக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த பேனர்களை இதுவரை அகற்றவில்லை.
இந்த பேனர்கள் தற்போது பல இடங்களில் காற்றில் ஊசலாடுகிறது. சில இடங்களில் சாய்ந்தும் கிடக்கின்றன. இவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் அவ்வளவு தான். பெரிய அளவில் விபத்து நடந்து உயிரிழிப்பு ஏற்படும்.
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில், புதிய பேனர்கள் மட்டும் அல்ல. பல மாதங்களுக்கு முன் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களும் அகற்றப்படாமல் உள்ளது.
அவை காற்றில் கிழிந்து கழிகள் ஆபத்தான முறையில் அங்கும் இங்கும் அசைந்தாடி அச்சுறுத்தி வருகின்றன. மின்கம்பங்களில் ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லுாரி தட்டிகள் அச்சுறுத்தும் வகையில் தொங்கிக்கொண்டுள்ளன. இவை எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் ஊசலாடுகின்றன.
ஆனால் இவற்றை கூட அகற்ற எந்த நடவடிக்கையும் பொதுப்பணித் துறை, நகராட்சி, போலீசார் இதுவரை எடுக்கவில்லை. கோர்ட் தலையிட்ட பிறகு அரசியல் கட்சியினர் பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் தான் மீண்டும் பேனர் கலாசாரத்தை ஆரம்பித்து வருகின்றனர்.
முதல்வர், அமைச்சர்கள் பெயர்களில், பேனர்கள் வைத்தால் அதிகாரிகளுக்கு பயம் வந்துவிடுகின்றது. அந்த பேனர்களை அகற்றுவதும் கிடையாது. அந்த பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை. கவனத்திற்கு வரும்போது மட்டும் ஒப்புக்கென ஒரு வழக்கு போடுகின்றனர். அதுவும் பேனர் வைத்தவர்கள் யார் என்று தெரியாதது போன்று சம்பிரதாயமாக ஒரு வழக்கை பதிந்து, கடைசியில் மூடிவிடுகின்றனர்.
பேனர்கள் தடுப்பு விஷயத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகராட்சி, போலீசார் மீது மக்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டனர். இதற்கு மேல் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டால் மட்டுமே புதுச்சேரியில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க முடியும். பேனர் வைத்தவர்கள், பேனரை அகற்றாமல் கடமை தவறிய அதிகாரிகள் மீது கோர்ட் தானாகவே முன் வந்து புதுச்சேரியை காப்பாற்ற வேண்டும்.
@block_B@
விபத்து அபாயம்சாலையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.block_B
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்