உழவர்கரை நகராட்சிக்கு மத்திய அரசு விருது

புதுச்சேரி: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், 'ஸ்வச்ச் ஸர்வேக்ஷன் 2024-25' விருது வழக்கும் விழா டில்லியில் நடந்தது.

விழாவிற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்கினார். இதில், துாய்மை மதிப்பீட்டின் 9வது பதிப்பாக, நாடு முழுதும் உள்ள நகரங்களை மதிப்பீடு செய்து, முன்னோடியான நகரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது.

அதில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் 'நம்பிக்கை அளிக்கும் துாய்மை நகரம்' பிரிவில் உழவர்கரை நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதைமத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் வழங்கினார். உழவர்கரை நகராட்சி சார்பில், உள்ளாட்சித்துறை செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Advertisement