மகள் மாயம் : தாய் புகார்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுாரில் மகளை காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுாரைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் சங்கீதா, 20; தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மளிகை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சங்கீதாவின் தாய் கலையரசி அளித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement