தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலம்: மயிலம் அருகே புலியனூர் கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிச்சைமுத்து முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மயிலம் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி புதிய உறுப்பினர் முகாமை துவக்கி வைத்து பேசினார்.

மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் துவக்கவுரையாற்றினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் ஜெயபால், சேகர், ஒன்றிய இளைஞரணி சம்சுதீன், ரவி, பிரபு, நடராஜ், உதயவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement