கங்கை அம்மன் கோவிலில் பாலாலயம்

விழுப்புரம்: வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் திருப்பணிக்கான பாலாலய வழிபாடு நடந்தது.

விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில், கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கான திருப்பணிகள் துவங்கி உள்ளன.

இந்த கோவிலில் இதற்கான பாலாலயம் வழிபாடு நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சாந்தி ஹோமம், கங்கை அம்மன் ஹோமங்கள் நடந்தன.

பிறகு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பாலாலயம் செய்து, சுவாமி சிலைகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement