40 ஏரிகளில் மீன்பாசி வளர்க்க குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 40 ஏரிகளில் மீன்பாசி வளர்க்க, குத்தகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
விழுப்புரம் தாலுகாவில் உள்ள கல்பட்டு, வளவனுார், மல்லிகைப்பட்டு, முத்தாம்பாளையம், வெங்கந்தர், அரியலுார்திருக்கை, மாம்பழப்பட்டு ஏரிகளிலும், விக்கிரவாண்டி தாலுகா வெள்ளையாம்பட்டு, முட்டத்துார், நேமூர், போரூர், அன்னியூர், அத்தியூர்திருக்கை ஏரிகளிலும், திருவெண்ணெய்நல்லுார் தாலுகா கீழ்தணியலாம்பட்டு, மணக்குப்பம், பாவந்துார் ஏரிகள், செஞ்சி தாலுகா பொன்பத்தி ஏரி, கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி, கோட்டைமருதுார், முகையூர், பரனுார் ஏரிகள், மரக்காணம் தாலுகா முன்னுார் ஏரி, திண்டிவனம் தாலுகா வீடூர், ஆவணிப்பூர், மொளசூர், பெரமண்டூர், பெரியதச்சூர், சாரம், சேந்தமங்கலம், வைராபுரம், விழுக்கம் ஏரிகள், வானுார் தாலுகா ஆண்பாக்கம், கொந்தாமூர், கொடூர், நல்லாவூர், பேராவூர், புளிச்சம்பள்ளம் சித்தேரி, புளிச்சம்பள்ளம் ஏரி, தென்னகரம், உலகாபுரம் ஏரிகள் என மொத்தம் 40 ஏரிகளில் மீன்பாசி வளர்க்க குத்தகை விடப்படுகிறது.
இதற்காக www.tntenders.gov.in என்ற இணையதளத்தில், மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம், 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விட உள்ளன. மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், விழுப்புரம். (0414 6-259329) தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு