பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி மகள் ஹக்சிகா,23; இவர், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுதியில் தங்கி கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி வி.அகரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் பணிக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை. இவரின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement