நல்லபிச்சம்பட்டி சர்ச் சப்பர பவனி

செந்துறை: - செந்துறை அருகே நல்லபிச்சம்பட்டி புனித உத்திரியமாதா சர்ச் சப்பர பவனி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நல்லபிச்சன்பட்டி புனித உத்திரியமாதா சர்ச் திருவிழா ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினமும் சர்ச்சில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. ஜூலை 15ல் இரவு தேர்பவனி , 16 மாலை பொதுபொங்கல், திருப்பலி நடைபெற்றது. இரவு வாணவேடிக்கையும், தாரை தம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னை தேர் பவனி , புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகள் நடந்தது. நேற்று மாலை புனிதர்களின் சப்பரபவனி, திப்பலியும், கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

Advertisement